வர்த்தகம்

ஓபிசி வங்கி லாபம் ரூ.101 கோடி

DIN


ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) வங்கி இரண்டாம் காலாண்டில் ரூ.101.74 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வியாழக்கிழமை மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்ததாவது:
யெஸ் வங்கியின் மொத்த வருவாய் செப்டம்பருடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.4,967.29 கோடியாகும். கடந்தாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.5,511.70 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறைவானதாகும். 
கடந்த நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் வங்கிக்கு ரூ.1,749.90 கோடி நிகர இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.101.74 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது. வாராக் கடன் அதிகரித்த நிலையிலும் இந்த நிலை எட்டப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30 நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 16.30 சதவீதத்திலிருந்து அதிகரித்து 17.24 சதவீதமாகியது. நிகர அளவிலான வாராக் கடன் விகிதம் 9.44 சதவீதத்திலிருந்து உயர்ந்து 10.77 சதவீதமாக காணப்பட்டது. இருப்பினும், வாராக் கடன் இடர்பாடுகளை சமாளிக்க ஒதுக்கப்பட்ட தொகை ரூ.3,146.92 கோடியிலிருந்து குறைந்து ரூ.1,073.75
கோடியாக காணப்பட்டது என ஓபிசி வங்கி தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

SCROLL FOR NEXT