வர்த்தகம்

புதிய அரசே தொழில் கொள்கையை அறிவிக்கும்: அமைச்சர் சுரேஷ் பிரபு

DIN


மத்தியில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசே பரிந்துரைக்கப்பட்ட புதிய தொழில் கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்திய தொழிலக கூட்டமைப்பின் 2019 ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்ற சுரேஷ் பிரபு இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது:
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் புதிய தொழில் கொள்கையை இறுதி செய்துள்ளது. தற்போது, அதனை மத்திய அமைச்சரவை குழுவின் இறுதி ஒப்புதலுக்கு வர்த்தக அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. இருப்பினும், புதிய தொழில் கொள்கையை மத்திய அமைச்சரவை குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ள புதிய அரசு அது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும்.
தற்போதைய தொழில் நிறுவனங்களை நவீனமயமாக்குவதையும், ஊக்குவிப்பதையும் புதிய தொழில் கொள்கை முக்கிய இலக்காக கொண்டுள்ளது. இதைத் தவிர, ஒழுங்கு விதிமுறை தடைகளை குறைக்கவும், காகித ஆவண நடைமுறைகளுக்கு முடிவு கட்டவும், புதிய துறையில் புதிய தொழில்களுக்கு ஆதரவளிக்கவும் புதிய தொழில் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அந்நிய நேரடி முதலீட்டைப் பொருத்தவரையில் அதனை பெருமளவு ஈர்ப்பதற்கு நாம் முயல வேண்டும். புதிய தொழில்களை தொடங்குவதன் மூலமாகவோ, கையப்படுத்துதல் திட்டங்கள் வாயிலாகவோ அதனை கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். எனவே, இரண்டுக்கும் ஏற்ற வியூகங்களை நாம் தயாரிக்க வேண்டும். ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், குறிப்பாக மாவட்ட அளவில் தொழில் தொடங்குவதை மேலும் எளிமையாக்கவும் வர்த்தகம் அமைச்சகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, ஆயிரக்கணக்கான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வர்த்தக அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இந்த நிலையில், 2018-19-இல் இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி 54,000 கோடி டாலரைத் (37.80 லட்சம் கோடி) தொடும் என சுரேஷ் பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT