வர்த்தகம்

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்: செயல்பாட்டு லாபம் 60% சரிவு

DIN


சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு செயல்பாட்டு லாபம் 60 சதவீதம் சரிந்துள்ளது.  
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சந்தைகள் பலவீனமான நிலையில் காணப்பட்டதையடுத்து நடப்பாண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்), சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 60.4 சதவீதம் அளவுக்கு சரிந்து 6.2 டிரில்லியன் வோன்-ஆக குறைந்துள்ளது. அதேபோன்று விற்பனையும் 52 டிரில்லியன் வோன்-ஆக சரிந்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் குறைவாகும் என சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது.
சாம்சங் தலைமை நிர்வாகி கைது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை சந்தித்த நிலையிலும், அந்த நிறுவனத்தின் லாபம் அண்மைக் காலமாக புதிய சாதனை படைக்கும் அளவில் அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது, அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. உலகளவில் சப்ளை அதிகரித்ததையடுத்து சிப்-களின் விலை சரிவை சந்தித்துள்ளது. மேலும், அதற்கான தேவையும் தற்போது குறைந்து போயுள்ளது. இதையடுத்தே, சாம்சங் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபமானது முதல் காலாண்டில் கணிசமான அளவு குறைந்துள்ளது.
மொபைல் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டிகளை சமாளிக்கும் வகையில் அந்நிறுவனம் பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
உலகளவில் தென் கொரியாவில் 5 ஜி சேவை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சாம்சங் தனது உயர் ரக, 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய மாடலான கேலக்ஸி எஸ் 10 செல்லிடப்பேசியை வெள்ளிக்கிழமை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT