வர்த்தகம்

ஹெச்டிஎஃப்சி வங்கி நிகர லாபம் ரூ.5,885 கோடியாக உயர்வு

DIN

தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கி நான்காம் காலாண்டில் ரூ.5,885.12 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி செபிக்கு சனிக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற 2018-19 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ஹெச்டிஎஃப்சி வங்கி ரூ.31,204.5 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. முந்தைய 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.25,549.7 கோடியுடன் ஒப்பிடும்போது இது 22.1 சதவீதம் அதிகமாகும்.
வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.10,657.7 கோடியிலிருந்து 22.8 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.13,089.5 கோடியாக இருந்தது. இதையடுத்து, சராசரி சொத்து மதிப்பு வளர்ச்சி 19.8 சதவீதமாகவும், நிகர வட்டி லாப வரம்பு 4.4 சதவீதமாகவும் காணப்பட்டது. 
நிகர வட்டி வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்ததன் காரணமாக, ஜனவரி-மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.4,799.28 கோடியிலிருந்து 23 சதவீதம் அதிகரித்து ரூ.5,885.12 கோடியைத் தொட்டுள்ளது.
கடந்த 2018 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 1.30 சதவீதமாக இருந்தது. இது, 2019 மார்ச் 31 நிலவரப்படி 1.36 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், நிகர வாராக் கடன் விகிதம் 0.40 சதவீதத்திலிருந்து குறைந்து 0.30 சதவீதமாகியுள்ளது.
2019 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.15 ஈவுத்தொகை வழங்க வங்கியின் இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது. வங்கியின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற்று இது நடைமுறைப்படுத்தப்படும். 
இதுதவிர, கடன்பத்திரங்கள் மூலமாக அடுத்த 12 மாதங்களில் ரூ.50,000 கோடியை திரட்டிக் கொள்ளவும் குழு அனுமதி வழங்கியுள்ளது என்று ஹெச்டிஎஃப்சி வங்கி 
தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT