வர்த்தகம்

சுந்தரம் ஃபாஸ்னர்ஸ் லாபம் ரூ.93 கோடி

DIN

டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் ஃபாஸ்னர்ஸ் நிறுவனம் ஜூனுடன் முடிந்த காலாண்டில் ரூ.93.11 கோடி நிகர லாபம் ஈட்டியது.
மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சுந்தரம் ஃபாஸ்னர்ஸ் மும்பை பங்குச் சந்தைக்கு வியாழக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் சுந்தரம் ஃபாஸ்னர்ஸ் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.945.35 கோடியை ஈட்டியது. இது,  கடந்த 2018-19-ஆம் நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ.968.51 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.
இதன் காரணமாக, நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபமும் ரூ.106.65 கோடியிலிருந்து ரூ.93.11 கோடியாக குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.3,990.22 கோடியாகவும், லாபம் ரூ.436.19 கோடியாகவும் இருந்தது என அந்த அறிக்கையில் சுந்தரம் ஃபாஸ்னர்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT