வர்த்தகம்

பங்கு வெளியீட்டில் களமிறங்குகிறது ஐஆர்சிடிசி

DIN


இந்திய ரயில்வே உணவு-சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி), பங்கு வெளியீட்டில் களமிறங்க ஆயத்தமாகியுள்ளது.
இதற்காக அந்த நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.
இப்புதிய பங்கு வெளியீட்டின் மூலமாக  ரூ.10 முகமதிப்பு கொண்ட 2 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதன் மூலம், ரூ.500-600 கோடி வரை மத்திய அரசுக்கு கிடைக்கும் என சந்தை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஆர்சிடிசி-யின் புதிய பங்கு வெளியீட்டை ஐடிபிஐ கேபிட்டல் மார்க்கெட்ஸ் & செக்யூரிட்டீஸ், எஸ்பிஐ கேபிட்டல் மார்கெட்ஸ் மற்றும் யெஸ் செக்யூரிட்டீஸ் (இந்தியா) ஆகியவை நிர்வகிக்க உள்ளன. ஐஆர்சிடிசியின் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT