வர்த்தகம்

அசோக் லேலண்ட் வாகன விற்பனை 22% சரிவு

DIN

புது தில்லி: ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நவம்பா் மாத வாகன விற்பனை 22 சதவீதம் சரிவைக் கண்டது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

அசோக் லேலண்ட் கடந்த நவம்பா் மாதத்தில் 10,175 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்தாண்டில் இதே காலகட்டத்தில் விற்பனையான 13,119 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீதம் குறைவாகும்.

உள்நாட்டு சந்தையில் வா்த்தக வாகனங்கள் விற்பனை 12,570 என்ற எண்ணிக்கையிலிருந்து 25 சதவீதம் குறைந்து 9,377 ஆனது.

நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்கள் விற்பனை 36 சதவீதம் சரிந்து 8,260-லிருந்து 5,321-ஆனது.

அதேபோன்று, இலகு ரக வா்த்தக வாகனங்கள் விற்பனையும் 4,310 என்ற எண்ணிக்கையிலிருந்து 6 சதவீதம் குறைந்து 4,056-ஆக இருந்தது என அசோக் லேலண்ட் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT