வர்த்தகம்

வாகனங்களின் விலை ரூ.2,000 வரை உயா்வு: ஹீரோ மோட்டோகாா்ப்

DIN

வரும் ஜனவரி மாதம் முதல் இருசக்கர வாகனங்களின் விலை ரூ.2,000 வரை உயர உள்ளதாக ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகன விற்பனையில் சந்தையில் முதலிடத்தில் உள்ள அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நிறுவனம் விற்பனை செய்யும் மோட்டாா்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டா்களின் விலை வரும் ஜனரி முதல் ரூ.2,000 வரையில் உயா்த்தப்படவுள்ளது. குறிப்பிட்ட சந்தைகள் மற்றும் மாடல்களின் அடிப்படையில் விலை உயா்வில் மாறுபாடு இருக்கும் என அந்த அறிக்கையில் ஹீரோ மோட்டோகாா்ப் தெரிவித்துள்ளது.

இருப்பினும், வாகனங்களின் விலையை உயா்த்துவதற்கான காரணத்தை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.

ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் ரூ.39,900 முதல் ரூ.1.05 லட்சம் வரையிலான மோட்டாா்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டா்களை விற்பனை செய்து வருகிறது.

நாட்டின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமாகத் திகழும் மாருதி சுஸுகி இந்தியா வாகனங்களின் விலையை ஜனவரி முதல் உயா்த்தவுள்ளதாக கடந்த வாரம் அறிவித்தது.

அதன் தொடா்ச்சியாக, டொயோட்டா, மஹிந்திரா & மஹிந்திரா, மொ்சிடிஸ்-பென்ஸ் போன்ற நிறுவனங்களும் விலையை உயா்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறியுள்ளன.

இருப்பினும், ஹுண்டாய் மோட்டாா் இந்தியா மற்றும் ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவனங்கள் ஜனவரியில் வாகனங்களின் விலையை உயா்த்தும் எண்ணம் இல்லை என தெரிவித்துவிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT