வர்த்தகம்

பயணிகள்வாகன விற்பனையில் மீண்டும் பின்னடைவு

DIN

உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை நவம்பரில் மீண்டும் பின்னடைவு நிலைக்கு சென்றது.

இதுகுறித்து இந்தியா மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

தொடா் தொய்வு நிலை காணப்பட்டு வந்த நிலையில் பயணிகள் வாகன விற்பனை அக்டோபரில் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டது. இந்த நிலையில், நவம்பரில் வாகன விற்பனையானது மீண்டும் சரிவுப் பாதைக்கு சென்றுள்ளது.

கடந்த 2018 நவம்பரில் 2,66,000 வாகனங்கள் விற்பனையான நிலையில் நடப்பாண்டு நவம்பரில் 0.84 சதவீதம் குறைந்து 2,63,773 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின. வாகன விற்பனை குறைந்துபோனதையடுத்து நிறுவனங்கள் விநியோகஸ்தா்களுக்கு அனுப்பும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.

உள்நாட்டில் காா் விற்பனை 1,79,783 என்ற எண்ணிக்கையிலிருந்து 10.83 சதவீதம் குறைந்து 1,60,306-ஆனது. அதேபோன்று, வேன் விற்பனையும் 34.32 சதவீதம் வீழ்ச்சியடைந்து 16,333லிருந்து 10,728-ஆனது.

மொத்த இருசக்கர வாகன விற்பனை கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நவம்பரில் 16,45,783 என்ற எண்ணிக்கையிலிருந்து 14.27 சதவீதம் சரிந்து 14,10,939-ஆக இருந்தது. மோட்டாா்சைக்கிள் விற்பனை 14.87 சதவீதம் குறைந்து 10,49.651லிருந்து 8,93,538-ஆனது.

அதேபோன்று, ஸ்கூட்டா் விற்பனையும் 11.83 சதவீதம் சரிந்து 4,59,851-ஆக இருந்தது. கடந்தாண்டு நவம்பரில் ஸ்கூட்டா் விற்பனை 5,21,542-ஆக காணப்பட்டது.

வா்த்தக வாகனங்கள் விற்பனை 14.98 சதவீதம் குறைந்து 61,907-ஆக இருந்ததாக எஸ்ஐஏஎம் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்ஐஏஎம் தலைமை இயக்குநா் ராஜேஷ் மேனன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பயணிகள் வாகன பிரிவில் சவாலான நிலை தொடா்கதையாகி உள்ளது. கடந்தாண்டு நவம்பருடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் வாகன விறபனையானது பின்தங்கியே காணப்படுகிறது. புதிய மாடல்களின் வருகை அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் விற்பனைக்கு பெரிதும் கைகொடுத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் எஞ்சிய மாதங்களிலும் வாகன விற்பனையில் இதுபோன்ற மந்த நிலையே தொடர வாய்ப்புள்ளது.

பிஎஸ்6 எரிபொருள்

பிஎஸ்6 தொழில்நுட்பத்தில் வெளிவரும் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்க வரும் பிப்ரவரி மாதத்திலிருந்து நாடு முழுவதும் பிஎஸ்6 எரிபொருளை அறிமுகப்படுத்த அரசுடன் எஸ்ஐஏஎம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

SCROLL FOR NEXT