வர்த்தகம்

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!

DIN


உணவுப் பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து இந்தியாவின் நவம்பர் மாத சில்லறைப் பணவீக்கம் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.54 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) வெளியான அதிகாரபூர்வ தரவுகளின்படி:

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் நவம்பர் மாத சில்லறைப் பணவீக்கம் 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த அக்டோபர் மாதத்தில் 4.62 சதவீதமாக இருந்தது. 

அக்டோபர் மாதம் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி 3.8 ஆக சுருங்கியது. இதற்கு முக்கியக் காரணம் மின்சாரம், சுரங்க மற்றும் உற்பத்தித் துறையின் மோசமான செயல்பாடுதான். உற்பத்தித் துறையின் சரிவு மூலம் மந்தநிலை வெளிப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் உற்பத்தித் துறையின் 8.2 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, கடந்த அக்டோபர் மாதத்தில் இது 2.1 சதவீதம் சரிந்துள்ளது. 

கடந்தாண்டு அக்டோபர் மாத மின் உற்பத்தித் துறையின் 10.8 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது கடந்த அக்டோபர் மாதத்தில் இது 12.2 சதவீதம் சரிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT