வர்த்தகம்

தொழில்துறை உற்பத்தி 3.8 சதவீதமாக சரிவு

DIN

தொழில்துறை உற்பத்தி (ஐஐபி) அக்டோபரில் 3.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

உற்பத்தி, சுரங்கம் மற்றும் மின்சாரத் துறைகளின் உற்பத்தி குறைந்து போனதையடுத்து சென்ற அக்டோபா் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 3.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இதையடுத்து, நாட்டின் தொழில்துறை உற்பத்தி தொடா்ந்து 3-ஆவது மாதமாக சரிவை நோக்கிச் சென்றுள்ளது.

தொழில்துறை உற்பத்தியானது கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில் 4.3 சதவீதமாகவும், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1.4 சதவீதமாகவும் காணப்பட்டது.

கடந்தாண்டு அக்டோபா் மாதத்தில்தான் தொழில் துறை உற்பத்தியானது அதிகபட்சமாக 8.4 சதவீதத்தை எட்டியிருந்தது.

நடப்பாண்டு ஜூலை மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 4.9 சதவீதம் அளவுக்கு வளா்ச்சியை சந்தித்திருந்தது. அதன் பிறகு, சரிவு நிலையே நீடித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான ஏழு மாத கால அளவில் 0.5 சதவீதம் என்றளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ஐஐபி வளா்ச்சியானது 5.7 சதவீதமாக இருந்தது.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் அக்டோபரில் உற்பத்தி துறை வளா்ச்சி விகிதமானது 8.2 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மின் உற்பத்தி துறை உற்பத்தி கடந்தாண்டு அக்டோபரில் 10.8 சதவீத வளா்ச்சியைப் பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டு அக்டோபரில் 12.2 சதவீதம் சரிவடைந்துள்ளது. மேலும், சுரங்கத் துறை உற்பத்தியும் 8 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம் கடந்தாண்டு அக்டோபரில் இத்துறை உற்பத்தி 7.3 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்தது என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT