வர்த்தகம்

நேரடி வரி வசூல் ரூ.7.89 லட்சம் கோடி

DIN


நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான கால அளவில் நிகர  அளவிலான நேரடி வரி வசூல் ரூ.7.89 லட்சம் கோடியாக இருந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  
இதுகுறித்து மத்திய நிதி இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா வெள்ளிக்கிழமை மக்களவையில் தெரிவித்ததாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான முதல் 10 மாத காலத்தில் நேரடி வரிகள் மூலம் ஈட்டிய வசூல் ரூ.7,88,930 கோடியாக இருந்தது. 
2016-17 வரி மதிப்பீட்டு ஆண்டின் கணக்கீட்டின்படி நேரடி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 9.92 கோடியாக உள்ளது.
2017-18-ஆம் ஆண்டில் மொத்த நேரடி வரி வசூல் ரூ.10.02 லட்சம் கோடியாக காணப்பட்டது.
மத்திய அரசின் திருத்திய மதிப்பீட்டில், நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூலானது ரூ.12 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-18-இல், நேரடி  வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.98 சதவீதம் என்ற அளவில் இருந்தது என சுக்லா தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT