வர்த்தகம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக அதிகரிக்கும்

DIN


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அந்த அலுவலகம் மேலும் கூறியுள்ளதாவது:
தயாரிப்பு மற்றும் வேளாண் துறைகளின் செயல்பாடுகளில் காணப்படும் முன்னேற்றத்தையடுத்து நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும். இது, 2017-18-ஆம் நிதியாண்டில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியான 6.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் அதிகம்.
குறிப்பாக, வேளாண், வனம், மீன்பிடி துறைகளின் செயல்பாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளதையடுத்து முந்தைய நிதியாண்டில் 3.4 சதவீதமாக இருந்த இத்துறையின் வளர்ச்சி 3.8 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று, தயாரிப்புத் துறையின் செயல்பாடுகளும் சூடுபிடித்துள்ளதால் அத்துறையின் வளர்ச்சியும் 5.7 சதவீதத்திலிருந்து 8.3 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2015-16 நிதியாண்டில் 8.2 சதவீதமாகவும், 2016-17 நிதியாண்டில் 7.1 சதவீதமாகவும் இருந்தது என்பன குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT