டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மூன்றாம் காலாண்டில் ரூ.178.39 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.4,663.98 கோடியாக இருந்தது.
இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.3,698.67 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 26.09 சதவீதம் அதிகம்.
நிகர லாபம் ரூ.154.35 கோடியிலிருந்து 15 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.178.39 கோடியாக இருந்தது.
டிசம்பர் காலாண்டில் ஏற்றுமதியை உள்ளடக்கிய ஒட்டு மொத்த இருசக்கர வாகனங்களின் விற்பனை 18.9 சதவீதம் அதிகரித்து 9.50 லட்சமாக காணப்பட்டது. மூன்று சக்கர வாகன விற்பனை 47 சதவீதம் உயர்ந்து 40,000-ஆக இருந்தது என டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது.