வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 39 காசுகள் உயர்வு

DIN


டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வியாழக்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் 39 காசுகள் அதிகரித்தது.
செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வர்த்தக தொடக்கத்தின்போது ரூபாய்  மதிப்பு 68.86-ஆக காணப்பட்டது. பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு, கச்சா எண்ணெய் விலை குறைவு போன்ற காரணங்களால் சந்தையில் டாலருக்கான தேவை குறைந்தது. இதையடுத்து, நாள் முழுவதுமான வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 68.49-வரை வலுப்பெற்றது.
வர்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 39 காசுகள் உயர்ந்து 68.50-இல் நிலைபெற்றது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.13 சதவீதம் குறைந்து 63.74 டாலராக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT