வர்த்தகம்

இன்டஸ்இண்ட் வங்கி லாபம் ரூ.1,432 கோடி

DIN

தனியார் துறை வங்கியான இன்டஸ்இண்ட் முதல் காலாண்டில் ரூ.1,432.50 கோடி நிகர லாபம் ஈட்டியது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.1,035.72 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 38 சதவீதம் அதிகம்.
 மொத்த வருவாய் ரூ.6,369.75 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.8,624.62 கோடியானது.
 கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி 1.15 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் விகிதம் நடப்பு நிதியாண்டில் 2.15 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று நிகர வாராக் கடன் விகிதமும் 0.51 சதவீதத்திலிருந்து 1.23 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 வாராக் கடன் அதிகரிப்பையடுத்து அதன் இடர்பாட்டுக்காக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.430.62 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் இது ரூ.350 கோடியாக காணப்பட்டது என செபியிடம் இன்டஸ்இண்ட் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT