வர்த்தகம்

பேங்க் ஆஃப் இந்தியா லாபம் இரு மடங்கு உயர்வு

DIN


பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியாவின் முதல் காலாண்டு லாபம் இருமடங்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி செபியிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.11,526.95 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.10,631.02 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.95.11 கோடியிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.242.62 கோடியாகி உள்ளது.
வழங்கப்பட்ட மொத்த கடனில் நிகர வாராக் கடன் விகிதம் 8.45 சதவீதத்திலிருந்து கணிசமாக குறைந்து 5.79 சதவீதமாகவும், மொத்த வாராக் கடன் விகிதம் 16.66 சதவீதத்திலிருந்து சற்று குறைந்து 16.50 சதவீதமாகவும் ஆகியுள்ளது.
வாராக் கடன் குறைந்துள்ள போதிலும், அதன் இடர்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகை முதல் காலாண்டில்   ரூ.9,255.60 கோடியாக இருந்தது என பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT