வர்த்தகம்

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் 43% அதிகரிப்பு

DIN


ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் மே மாதத்தில் 43 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆர்டிஏஐ) புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆயுள் காப்பீட்டில் ஈடுபட்டுள்ள 24 நிறுவனங்கள் கடந்தாண்டு மே மாதத்தில் புதிய வர்த்தகத்தின் மூலம் ரூ.12,838.24 கோடியை ஈட்டியிருந்தன. இது, நடப்பாண்டு மே மாதத்தில் 43 சதவீதம் அதிகரித்து ரூ.18,414.02 கோடியை எட்டியது. 
குறிப்பாக, நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி புதிய பிரீமிய வருவாய் மூலம் ரூ.13,496.68 கோடியை ஈட்டியது. இது, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 46.6 சதவீதம் அதிகமாகும்.
எஞ்சியுள்ள 23 தனியார் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் புதிய பிரீமிய வசூல் மூலம் ரூ.4,917.34 கோடியை ஈட்டியது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 35.3 சதவீதம் அதிகமாகும் என அந்தப் புள்ளிவிவரத்தில் ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.
நடப்பு 2019-20 நிதியாண்டின் முதல் இரு மாத காலத்தில் (ஏப்ரல்-மே) நிறுவனங்களின் புதிய பிரீமிய வசூல், கடந்த 2018-19 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 41.2 சதவீதம் அதிகரித்து ரூ.28,395.90 கோடியாக உள்ளது.
இதில், எல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமிய வசூல் 38.4 சதவீதம் உயர்ந்து ரூ.18,764.63 கோடியாக காணப்பட்டது.
இதர தனியார் துறை ஆயுள்காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் 47 சதவீதம் அதிகரித்து ரூ.9,631.27 கோடியாக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT