வர்த்தகம்

இந்திய பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு: 6.6% சதவீதமாக குறைத்தது ஃபிட்ச் நிறுவனம்

DIN


நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த  மதிப்பீட்டை ஃபிட்ச் நிறுவனம் 6.6 சதவீதமாக குறைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று  முன்னர் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஓராண்டாக தயாரிப்பு மற்றும் வேளாண் துறைகளின் வளர்ச்சி மந்த நிலையில் இருந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 6.6 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டும் என தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த வளர்ச்சி எதிர்வரும் 2020-21 நிதியாண்டில் 7.1 சதவீதமாகவும், 2021-22 நிதியாண்டில் 7.0 சதவீதமாகவும் இருக்கும் என ஃபிட்ச் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 5-ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாக 6.8 சதவீத வளர்ச்சியை மட்டுமே பெற்றிருந்தது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி அதைவிட குறைவான அளவில் 6.6 சதவீதமாகவே இருக்கும் என ஃபிட்ச் கணித்துள்ளது. 2018 மார்ச் காலாண்டில் 8.1 சதவீதமாக அதிகரித்து காணப்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2018-19 நிதியாண்டில் தொடர்ந்து நான்காவது காலாண்டாக ஜனவரி-மார்ச்சில் 5.8 சதவீதமாக குறைந்து போனது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT