வர்த்தகம்

மனம் கவர்ந்த நிறுவன பிராண்ட்: அமேசான் இந்தியாவுக்கு முதலிடம்

DIN


இந்தியாவில் மிகவும் மனம் கவர்ந்த நிறுவன பிராண்ட் பட்டியலில் அமேசான் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து ரான்ட்ஸ்டட் எம்ப்ளாயர் பிராண்ட் ரிசர்ச் 2019- ஆய்வறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் பெரும்பான்மை மக்களை கவர்ந்திழுக்கும் நிறுவன பிராண்ட் பட்டியலில் அமேசான் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 
நிதி நிலைமை, பயன்பாடு, நவீன தொழில்நுட்பம் மற்றும் வலுவான நற்பெயர் ஆகியவற்றின் அடிப்படையில் அமேசான் இந்தியா அதிக புள்ளிகளைப் பெற்று பட்டியலில் முதலிடத்தை தக்க  வைத்துக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மைக்ரோஸாஃப்ட் இந்தியா இரண்டாவது இடத்தையும், சோனி இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
10 நிறுவனங்கள் அடங்கிய அந்தப் பட்டியலில், மெர்ஸிடிஸ்-பென்ஸ் (4), ஐபிஎம் (5), லார்சன் & டூப்ரோ (6), நெஸ்லே (7), இன்ஃபோசிஸ் (8), சாம்சங் (9), டெல் (10) ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT