வர்த்தகம்

மஹிந்திராவின் மின்சார சூப்பர் கார்!

DIN

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வரும் மோட்டார் கண்காட்சியில் மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த பினின்ஃபரினா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் சூப்பர் காரை அறிமுகம் செய்தது.
ஃபார்முலா1 பந்தயக் காரைவிட அதிவேகமாக செல்ல கூடியது பட்டிஸ்டா. மணிக்கு 100 கி.மீ. வேகத்தை இரண்டே விநாடிகளில் அடையும் திறன் கொண்டது.
இதுகுறித்து பினின்ஃபரினா தலைமை செயல் அதிகாரி மிஷெல் பெர்ஷ்கே கூறியது: "உலகின் மிகச் சிறந்த கார்களில் ஒன்றாக பட்டிஸ்டா விளங்கும். வாகனத் துறை வரலாற்றில் தனி முத்திரையை இந்தக் கார் பதிக்கும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான பசுமைத் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 150 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும். இவை அனைத்தும் இத்தாலியில் உள்ள ஆலையில் உருவாக்கப்படும் என்றார்.
இத்தாலியின் பிரபல பினின்ஃபரினா நிறுவனத்தை கடந்த 2015ஆம் ஆண்டு மஹிந்திரா கையகப்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT