வர்த்தகம்

சீனாவில் 3-வது தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தை தொடங்கியது இந்தியா

DIN


சீனாவில் 3-வது தகவல் தொழில்நுட்ப (ஐடி) வர்த்தக வழித்தடத்தை இந்தியா தொடங்கியுள்ளது.
இந்த தகவல் தொழில்நுட்ப வர்த்தக வழித்தடத்தை மேம்படுத்துவதற்காக நாஸ்காம் அமைப்பு,  ஜியாங்ஸு மாகாணம் ஸிகோவ் நகரத்துடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. 
டாலியான் மற்றும் குயாங் நகரங்களுடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப வர்த்தக வழித்தடத்தை நாஸ்காம் அமைப்பு ஏற்கெனவே ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்த நிலையில், 3-வது ஐடி வர்த்தக வழித்தடத்தை தொடங்குவதாக நாஸ்காம் தற்போது  அறிவித்துள்ளது. இந்த வழித்தடத்தின் மூலமாக 10-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் உள்ளிட்ட 300 நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதற்காக, 45 லட்சம் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT