வர்த்தகம்

காக்னிஸன்ட் நிகர வருவாய் 15% சரிவு

DIN


தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த காக்னிஸன்ட் நிறுவனத்தின் நிகர வருவாய் முதல் காலாண்டில் 15 சதவீத சரிவை சந்தித்துள்ளது. ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான கால அளவை நிதியாண்டாக கடைப்பிடித்து வரும் காக்னிஸன்ட், பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி வருவாய் வளர்ச்சி எதிர்பார்த்த அளவை விட குறையும் என தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) நிறுவனம் நிகர அளவில்  44.1 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. முந்தைய 2018-ஆம் ஆண்டில் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் 52 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் குறைவாகும்.
நடப்பு 2019 நிதியாண்டில் வருவாய் வளர்ச்சி சில மாதங்களுக்கு முன்பு 7-9 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், நிதி சேவைகள் மற்றும் ஆரோக்கியப் பராமரிப்பு துறையின் வளர்ச்சி குறைவாக இருக்கும் என்ற நிலைப்பாட்டால், நடப்பு நிதியாண்டில் நிலையான கரன்ஸி மதிப்பு அடிப்படையில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 3.6-5.1 சதவீதம் அளவுக்கே இருக்கும் என காக்னிஸன்ட் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT