வர்த்தகம்

சுந்தரம் பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் லாபம் 113% உயர்வு

DIN

சென்னை: சுந்தரம் பைனான்ஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 113.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
சுந்தரம் பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.42 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் வருவாய் ரூ.23 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.15 கோடியிலிருந்து 113.3 சதவீதம் அதிகரித்து ரூ.32 கோடியானது.

2018-19 முழு நிதியாண்டில் வருவாய் ரூ.76 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.121 கோடியாகவும், நிகர லாபம் ரூ.54 கோடியிலிருந்து 57.4 சதவீதம் அதிகரித்து ரூ.85 கோடியாகவும் இருந்தது.

நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டத்தில், ரூ.5 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.1.75 ஈவுத்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டதாக சுந்தரம் பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT