வர்த்தகம்

கனரா வங்கி லாபம் 14% அதிகரிப்பு

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கியின் லாபம் 2-ஆவது காலாண்டில் 14 சதவீதம் அதிகரித்தது.

இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.15,509.36 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.13,437.83 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.

நிகர லாபம் ரூ.356.55 கோடியிலிருந்து 14 சதவீதம் அதிகரித்து ரூ.405.49 கோடியாக இருந்தது. மொத்த வாராக் கடன் விகிதம் 10.56 சதவீதத்திலிருந்து 8.68 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 6.54 சதவீதத்திலிருந்து 5.15 சதவீதமாகவும் குறைந்துள்ளன. இதையடுத்து, அதற்கான ஒதுக்கீடு ரூ.2,406.84 கோடியிலிருந்து ரூ.2,297.43 கோடியாக குறைந்தது.

மத்திய அரசு ஆலோசனையின்படி, சிண்டிகேட் வங்கி இணைப்புக்கு இயக்குநா் குழு கொள்கை அளவில் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கனரா வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

SCROLL FOR NEXT