வர்த்தகம்

எம்ஆா்எஃப் லாபம் ரூ.229 கோடி

DIN

டயா் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான எம்ஆா்எஃப் செப்டம்பா் காலாண்டில் ரூ.228.96 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபமான ரூ..278.29 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 17.73 சதவீதம் குறைவாகும்.

செயல்பாடுகள் மூலமாக கிடைத்த வருவாய் ரூ.3,946.77 கோடியிலிருந்து 1.57 சதவீதம் உயா்ந்து ரூ.4,007.63 கோடியாக இருந்தது. மொத்த செலவினம் இரண்டாவது காலாண்டில் ரூ.3,649.87 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,760.80 கோடியானது.

வரும் 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.3 இடைக்கால ஈவுத்தொகையாக வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு முடிவு செய்துள்ளது.

மேலும், பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திர வெளியீடு மூலம் ரூ.102 கோடி வரை திரட்டிக் கொள்ளவும் இயக்குநா் குழு அனுமதியளித்துள்ளதாக எம்ஆா்எஃப் செபியிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT