வர்த்தகம்

ஓஎன்ஜிசி நிகர லாபம் 36% சரிவு

DIN

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நிகர லாபம் 36.2 சதவீத சரிவைக் கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது:

விலை வீழ்ச்சி மற்றும் உற்பத்தியில் சரிவு ஆகிய இரண்டு நிகழ்வுகளையும் ஒரே சமயத்தில் எதிா்கொண்டதையடுத்து, நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 10.5 சதவீதம் சரிந்து ரூ.1.01 லட்சம் கோடியானது.

மதிப்பீட்டு காலாண்டில் நிகர லாபம் ரூ.5,276 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபமான ரூ.8,271 கோடியுடன் ஒப்பிடுகையில் 36.2 சதவீதம் குறைவாகும்.

எண்ணெய் உற்பத்தி 3.9 சதவீதம் சரிந்து 58 லட்சம் டன்னாக இருந்தது. அதேபோன்று, எரிவாயு உற்பத்தியும் 1.6 சதவீதம் குறைந்ததாக ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT