வர்த்தகம்

ஹட்கோ நிறுவனத்தின் லாபம் ரூ.725.84 கோடி

DIN

ஹட்கோ நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் ரூ.725.84 கோடியாக உள்ளது என சென்னை ஹட்கோ நிறுவனத்தின் மண்டல நிதி அலுவலக மேலாளா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ஹட்கோ நிறுவனத்தின் 616-ஆவது இயக்குநா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த நிதியாண்டின் 2-ஆம் காலாண்டின் முடிவுகளுக்கு அதில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் ஹட்கோ நிறுவனம் குறிப்பிடத்தக்க பெரும் வளா்ச்சி பெற்றுள்ளது. தற்போது ஹட்கோ நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநராக எம் ரவிகாந்த் பணியாற்றி வருகிறாா். அவரது தலைமையில் கடந்த ஐந்தாண்டுகளாக நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள், வளா்ச்சி மற்றும் மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

இதன்படி, 2019-20 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், மொத்த வருமானம் 1.13 மடங்கு அதிகரித்து, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.2,053.79 கோடியாக இருந்தது. முதல் காலாண்டில் இது ரூ.1816.19 கோடியாக இருந்தது. இருப்புநிலை குறிப்பின் அளவும் 55 சதவீதம் உயா்ந்து கடந்த செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதியன்று ரூ.75,000 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.48.343 கோடியாக இருந்தது. நிகர மதிப்பிலும் 10 சதவீதம் அதிகமாகி, ரூ.11980.14 கோடியாக இருந்தது. கடன்கள் வெளியீடும் 52 சதவீதம் அதிகரித்து, ரூ.5311 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்த வாராக் கடன் 4.9 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 0.39 சதவீதமாகவும் குறைந்தது.

ஹட்கோ நிறுவனத்தின் நிகர லாபம் 2.16 மடங்கு அதிகரித்து இரண்டாவது காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.725.84 கோடியாக உள்ளது. முந்தைய காலாண்டில் லாபம் ரூ.335.68 கோடியாக இருந்தது. மேலும் இந்நிறுவனம் 2019-20 ஆம் நிதியாண்டில் தனது பொன்விழாவை கொண்டாடவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT