வர்த்தகம்

சென்செக்ஸ் 87 புள்ளிகள் உயா்வு

தினமணி

இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
 இரண்டாம் காலண்டுக்கான நிதி நிலை முடிவுகள், பணவீக்க புள்ளிவிவரம் ஆகியவற்றை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதனால், பங்குச் சந்தைகள் தொடக்கத்தில் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன.
 வர்த்தகப் போர் பதற்றத்தை தணிக்கும் வகையில் அமெரிக்கா-சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றத்துக்கான அறிகுறிகள் தென்பட்டது. இது, சர்வதேச சந்தைகளின் உயர்வுக்கு வழிவகுத்தது. அதன் தாக்கம், இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
 மும்பை பங்குச் சந்தையில், தொலைத்தொடர்பு, கட்டுமானம், மோட்டார் வாகனம், எண்ணெய்-எரிவாயு, உலோகம், ஆரோக்கிய பராமரிப்பு, எரிசக்தித் துறைகளின் குறியீட்டெண் 2.24 சதவீதம் வரை குறைந்தன.
 அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் பொறியியல் சாதன துறை குறியீட்டெண் 0.44 சதவீதம் வரை உயர்ந்தன.
 நிறுவனங்களைப் பொருத்தவரையில், டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 5.32 சதவீதம் உயர்ந்தது. ஓஎன்ஜிசி பங்கின் விலை 4.73 சதவீதம் அதிகரித்தது.
 இவை தவிர, பார்தி ஏர்டெல், இன்டஸ்இண்ட் வங்கி, சன் பார்மா, ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுஸுகி, பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ் நிறுவனப் பங்குகளுக்கும் முதலீட்டாளர்களிடம் வரவேற்பு காணப்பட்டது.
 அதேசமயம், இன்ஃபோசிஸ், பஜாஜ் பைனான்ஸ், பவர்கிரிட், எல் & டி, கோட்டக் வங்கி பங்குகளின் விலை 3.68 சதவீதம் வரை குறைந்தன.
 மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 87 புள்ளிகள் அதிகரித்து 38,214 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 36 புள்ளிகள் உயர்ந்து 11,341 புள்ளிகளில் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT