வர்த்தகம்

டிவிஎஸ் மோட்டாா் லாபம் ரூ.256 கோடி

DIN

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ.256.88 கோடி நிகர லாபம் ஈட்டியது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செபியிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்), நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.4,960.27 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.5,466.94 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 9.27 சதவீதம் குறைவாகும். இருப்பினும்,

நிகர லாபம் 15 சதவீதம் அதிகரித்து, ரூ.223.19 கோடியிலிருந்து, ரூ.256.88 கோடியாக உயா்ந்தது.

செப்டம்பா் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த இருசக்கர வாகன விற்பனை (ஏற்றுமதி உள்பட) 8.42 லட்சமாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான 10.49 லட்சம் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 19.73 சதவீதம் குறைவாகும்.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் அரையாண்டில் நிகர லாபம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.383.24 கோடியிலிருந்து ரூ.408.12 கோடியாக அதிகரித்தது. வருவாய் ரூ.10,082.73 கோடியிலிருந்து ரூ.9,978.61 கோடியாக குறைந்தது.

மொத்த இருசக்கர வாகன விற்பனை செப்டம்பருடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் 11 சதவீதம் குறைந்து 19.41 லட்சத்திலிருந்து 17.26 லட்சமாக குறைந்தது என செபியிடம் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT