வர்த்தகம்

அசோக் லேலண்ட் விற்பனை 47 சதவீதம் வீழ்ச்சி

DIN


ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வர்த்தக  வாகனங்கள் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 47 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அசோக் லேலண்ட் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9,231 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 17,386 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 47 சதவீதம் குறைவாகும்.
நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 13,158 என்ற எண்ணிக்கையிலிருந்து 59 சதவீதம் சரிந்து 5,349 ஆனது. அதேபோன்று இலகு ரக வர்த்தக வாகன விற்பனையும் 4,228-என்ற அளவிலிருந்து 8 சதவீதம் குறைந்து 3,882 ஆனது என அறிக்கையில் அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT