வர்த்தகம்

வாகன விற்பனை வரலாறு காணாத வீழ்ச்சி

DIN


கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்திய வாகனங்களின் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
இதுகுறித்து இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
இந்திய வாகனச் சந்தையின் அனைத்துப் பிரிவுகளும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சரிவைச் சந்தித்துள்ளன.
வாகன விற்பனை தொடர்பான புள்ளிவிவரங்களை எஸ்ஐஏஎம் சேகரித்த 1997-98-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு அனைத்து ரக வாகனங்களின் விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கார்கள், இரு சக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் ஆகியவற்றின் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 18,21,490 வாகனங்களாக இருந்தது. இது, கடந்த 2018-ஆம் ஆண்டு விற்பனையான 23,82,436 வாகனங்களோடு ஒப்பிடுகையில் 23.55 சதவீதம் குறைவாகும்.
முந்தைய ஜூலை மாதத்தில் அனைத்து ரக வாகனங்களின் விற்பனை, 18,25,148-ஆக இருந்தது. முந்தைய ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த விற்பனை 18.71 சதவீதம் குறைவாக இருந்தது. அது, கடந்த 19 ஆண்டுகளில் காணப்படாத மிகப் பெரிய வீழ்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில், ஆகஸ்ட் மாத வாகன விற்பனை, இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்று எஸ்ஐஏஎம்-மின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT