வர்த்தகம்

மோட்டார் வாகன விற்பனை 5-7% அதிகரிக்கும்

DIN

மோட்டார் வாகன விற்பனை நடப்பு நிதியாண்டில் 5-7 சதவீதம் அதிகரிக்கும் என தரக்குறியீட்டு நிறுவனமான கேர் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வாகன விலை உயர்வு, நிதி சிக்கல்கள், காப்பீட்டுக் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கிடையிலும் நடப்பு நிதியாண்டில் மோட்டார் வாகன விற்பனை டிராக்டர்களைத் தவிர 5-7 சதவீதம் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல்-ஆகஸ்ட் கால அளவில் மோட்டார் வாகன விற்பனை 13.3 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சியடைந்தது. கடந்தாண்டின் இதே காலத்தில் விற்பனை 14.5 சதவீதம் என்ற அளவில் இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டிருந்தது.
இதற்கு முன்பாக, கடந்த 1993-ஆம் ஆண்டில்தான் வாகன விற்பனையானது 21 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டிருந்தது. அதன்பிறகு, நடப்பாண்டில்தான் வாகன விற்பனை அதே இரட்டை இலக்க அளவுக்கு சரிந்துள்ளது.
புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, வாகனங்களின் விலை 15-20 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது வாகனங்களின் விற்பனை சரிவுக்கு முதன்மை காரணமாக பார்க்கப்படுகிறது.  அதேபோன்று, வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியும் வாகன விற்பனையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டின் தொடக்கத்தில் வாகன விற்பனையில் மந்த நிலை காணப்பட்ட போதிலும், ஆகஸ்ட் மாதத்தில் பயணிகள் கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை முறையே 1.8 சதவீதம் மற்றும் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரம், வர்த்தக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனை முறையே 7.4 சதவீதம் மற்றும் 0.3 சதவீதம் பின்னடைவைக் கண்டுள்ளது. முந்தைய ஜூலையில் இவற்றின் விற்பனை முறையே 17.5 சதவீதம் மற்றும் 6.6 சதவீதம் சரிந்திருந்தது.
வாகன தேவையில் காணப்படும் மந்த நிலை நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மூன்று மற்றும் நான்காவது காலாண்டுகளில் வாகன விற்பனை வேகமெடுக்கும் என தெரிகிறது. 
இதற்கு, பிஎஸ் 6 விதிமுறைகள் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது, பல்வேறு புதிய தயாரிப்புகள் சந்தையில் அறிமுகம், பண்டிகை கால வாகன  விற்பனை ஆகியவை கைகொடுக்கும் என்று கேர் நிறுவனத்தின் ஆய்வில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT