வர்த்தகம்

நடப்பு நிதியாண்டில் 450 புதிய கிளைகள்; 3500 பேருக்கு வேலைவாய்ப்பு: ஐசிஐசிஐ வங்கி

DIN


நடப்பு நிதியாண்டில் 450 புதிய கிளைகளை அமைக்கவும், 3500 பேருக்கு பணிவாய்ப்புகளை வழங்கவும் உள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் செயல் இயக்குநர் அனுப் பக்ஷி பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளதாவது:
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக,  ரியல் எஸ்டேட் துறை தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இது வங்கியின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு கைகொடுத்துள்ளது.
வரும் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 450 புதிய கிளைகளை அமைக்கவுள்ளோம். இதையடுத்து, வங்கியின் ஒட்டுமொத்த கிளைகளின் எண்ணிக்கை 5,300-ஐ எட்டும். மேலும், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 3500 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம். சந்தைப் பங்களிப்பை பொருத்தவரை இரட்டை இலக்க வளர்ச்சியை நெருங்கி விட்டோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT