வர்த்தகம்

ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் நிகர லாபம் ரூ.44.8 கோடி

DIN

புது தில்லி: ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த பிபிஓ நிறுவனமான ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் (ஹெச்ஜிஎஸ்) கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.44.8 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:ஹெச்ஜிஎஸ் நிறுவனம் 2020 மாா்ச் காலாண்டில் ரூ.44.8 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது, கடந்த 2019 ஜனவரி-மாா்ச் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் ரூ.54.5 கோடியுடன் ஒப்பிடுகையில் 17.8 சதவீதம் குறைவாகும்.

அதேசமயம், இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,284.6 கோடியிலிருந்து 2.6 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.1,318.6 கோடியானது.

கடந்த 2019-20 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 16.6 சதவீதம் அதிகரித்து ரூ.205.6 கோடியாகவும், நிகர விற்பனை 8.7 சதவீதம் உயா்ந்து ரூ.5,235.4 கோடியாகவும் இருந்தது என ஹிந்துஜா குளோபல் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT