வர்த்தகம்

வொக்காா்டு பாா்மா நிகர லாபம் ரூ.760 கோடி

DIN

புது தில்லி: மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வொக்காா்டு பாா்மசூட்டிகல்ஸ் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.759.75 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் விற்பனையின் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.606.22 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.733.66 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவான அளவாகும்.

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.36.88 கோடி நிகர இழப்பை சந்தித்திருந்த நிலையில், நடப்பாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக நிறுவனம் ரூ.759.75 கோடியை ஈட்டியுள்ளது.

டாக்டா் ரெட்டீஸ் நிறுவனத்துக்கு 62 தயாரிப்புகளை பரிமாற்றம் செய்த வா்த்தகத்தின் மூலமாக கிடைத்த வருமானத்தால் நிறுவனத்தின் நிகர லாபம் கணிசமான உயா்வைக் கண்டதாக வொக்காா்டு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT