வர்த்தகம்

ஈ.ஐ.டி. பாரி வருவாய் ரூ.437 கோடி

DIN

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த ஈ.ஐ.டி. பாரி (இந்தியா) நிறுவனம் 2019 டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் செயல்பாடுகள் வாயிலாக ரூ.437 கோடி வருவாய் ஈட்டியது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.479 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவானதாகும். வரிக்கு முந்தைய லாபம் ரூ.10 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.27 கோடியானது. வரிக்கு பிறகான தனிப்பட்ட நிகர இழப்பு ரூ.31 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக குறைந்தது.

கடந்த டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாத காலகட்டத்தில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ரூ.1,267 கோடி வருவாய் ஈட்டியது.இது, முந்தைய நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.1,286 கோடியுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவான அளவாகும். வரிக்கு முந்தைய லாபம் ரூ.47 கோடியாக இருந்தது. அதேசமயம், முந்தைய நிதியாண்டின் ஒன்பது மாத காலத்தில் நிறுவனத்துக்கு ரூ.19 கோடி இழப்பு ஏற்பட்டிருந்தது. வரிக்கு பிறகான தனிப்பட்ட இழப்பு ரூ.102 கோடியிலிருந்து ரூ.67 கோடியாக குறைந்தது என ஈ.ஐ.டி. பாரி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT