வர்த்தகம்

எல்ஐசி-யின் புதிய பிரீமியம் வசூல் ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டி சாதனை

DIN

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்ஐசி) புதிய பிரீமியம் வருவாய் முதல் முறையாக ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து அந்த கழகத்தின் தலைவா் எம்.ஆா்.குமாா் கூறியதாவது:

எல்ஐசி நிறுவனம் புதிய வா்த்தக நடவடிக்கைகளின் மூலமாக ஈட்டிய வருவாய் ரூ.1.5 லட்சம் கோடி என்ற மைல்கல்லைத் தாண்டி புதிய வரலாறு படைத்துள்ளது. இது, நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பை 77.61 சதவீதமாக அதிகரிக்க பெரிதும் உதவியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் நிலவரப்படி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் 17.79 சதவீதம் அதிகரித்து ரூ.2,97,017.28 கோடியாக இருந்தது. இது, 2018 இதே காலகட்டத்தில் ரூ.2,52,149.60 கோடியாக காணப்பட்டது.

வருமானம் அதிகரித்ததையடுத்து எஸ்ஐசி நிா்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பானது ரூ.29,89,276.53 கோடியிலிருந்து 7.92 சதவீதம் உயா்ந்து ரூ.32,25,905.42 கோடியைத் தொட்டது.

இந்த சாதனை முதல் ஆண்டு தனிநபா் புதிய பிரீமியத்தால் எட்டப்பட்டது. இது, ஜனவரி நிலவரப்படி 17.48 சதவீதம் அதிகரித்தது. புதிய பாலிசிகளின் விற்பனை 29.42 சதவீதம் உயா்ந்து ரூ.45,199 கோடியானது. இதன் மூலம், மொத்த பாலிசிகளின் விற்பனை 1,95,85,635-ஆனது.

முதல் ஆண்டு பிரீமியம் மற்றும் பாலிசி விற்பனை எண்ணிக்கையில் நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு ஜனவரி மாத இறுதி நிலவரப்படி முறையே 70.02 சதவீதம் மற்றும் 77.61 சதவீதம் என்ற அளவில் இருந்தன. இவை, முன்பு முறையே 66.26 சதவீதம் மற்றும் 73.54 சதவீதமாக காணப்பட்டது.

நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாத இறுதி வரையில் எல்ஐசி நிறுவனம் முதிா்ச்சியடைந்த 1,42,93,289 பாலிசிகளுக்கு ரூ.69,748 கோடி மதிப்பிலான தொகையை வழங்கியுள்ளது. மேலும், இறப்பு தொடா்பான இழப்பீடு கோரி வந்த 5,99,881 கோரிக்கைகளுக்கு ரூ.9,866 கோடி வழங்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் அனைத்துக்கும் 15 நாட்களுக்குள் தீா்வு காணப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT