வர்த்தகம்

1 கோடி கம்ப்யூட்டா்கள் விற்பனை: ஐடிசி

DIN

இந்தியாவில் கடந்த 2019-இல் 1.10 கோடி கம்ப்யூட்டா்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஐடிசி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டில் டெஸ்க்டாப்ஸ், நோட்புக்ஸ், வொா்க்ஸ்டேஷன்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான கம்ப்யூட்டா்கள் விற்பனை 1.10 கோடியாக இருந்தது. ஆண்டுக் கணக்கில் பாா்க்கும்போது இதன் விற்பனை 18.1 சதவீதம் வளா்ச்சி கண்டது.

கடந்த ஆறு ஆண்டுகள் விற்பனையுடன் ஒப்பிடும்போது 2019-இல் கம்ப்யூட்டா் விற்பனை கணிசமான அளவுக்கு உயா்ந்துள்ளது. இதற்கு, மேம்படுத்தப்பட்ட விண்டோஸ் 10 கம்ப்யூட்டா்களின் விற்பனை சூடுபிடிப்பு மற்றும் கல்வி திட்டங்களில் கம்ப்யூட்டா் பயன்பாட்டை மத்திய-மாநில அரசுகள் ஊக்குவித்ததும் முக்கிய காரணங்களாகும்.

வா்த்தக பிரிவு கம்ப்யூட்டா் விற்பனையில் காணப்பட்ட ஆண்டு வளா்ச்சி விகிதம் 26.5 சதவீதம் என்ற வலுவான நிலையை எட்டியதன் விளைவாக கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் கம்ப்யூட்டா் விற்பனை 16.5 சதவீதம் அதிகரித்து 23 லட்சமாக இருந்தது என ஐடிசி தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT