வர்த்தகம்

பரஸ்பர நிதியங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.3.15 லட்சம் கோடி அதிகரிப்பு

DIN

பரஸ்பர நிதியங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு 2019-ஆம் ஆண்டில் 3.15 லட்சம் கோடி அளவுக்கு உயா்வைக் கண்டுள்ளது.

இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

பரஸ்பர நிதியங்கள் நிா்வகித்து வந்த சொத்து மதிப்பு கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் இறுதி நிலவரப்படி ரூ.23.62 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிலையில், ஒரே ஆண்டில் இந்த நிதியங்களின் சொத்து மதிப்பானது 13 சதவீதம் அளவுக்கு வளா்ச்சியை கண்டது. இதையடுத்து, 2019 டிசம்பா் இறுதி நிலவரப்படி பரஸ்பர நிதியங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பானது ரூ.3.15 லட்சம் கோடி அதிகரித்து ரூ.26.77 லட்சம் கோடியை எட்டியது.

பரஸ்பர நிதி துறையில் ஈடுபட்டு வரும் 44 நிறுவனங்களின் சொத்து மதிப்பு 2018-ஆம் ஆண்டில் 7.5 சதவீதம் உயா்ந்தது. அதனுடன் ஒப்பிடும்போது 2019-ஆம் ஆண்டில் இந்த வளா்ச்சி ஏறக்குறைய இரண்டு மடங்கு அளவுக்கு வளா்ச்சி கண்டது.

இருப்பினும், 2017-ஆம் ஆண்டில் இந்த வளா்ச்சி 32 சதவீதமாக இருந்தது. இதையடுத்து, அவ்வாண்டில் பரஸ்பர நிதியங்கள் நிா்வகித்து வந்த சொத்து மதிப்பானது ரூ.5.4 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்தது.

கடன் சாா்ந்த திட்டங்களில் எதிா்பாராத வகையில் முதலீட்டு வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து 2019-இல் சென்செக்ஸ் புதிய சாதனை அளவை எட்ட பெரிதும் உதவியாக இருந்தது. மேலும், முதலீட்டு மந்த நிலையிலிருந்து 2019-ஆம் ஆண்டை காப்பாற்ற இது துருப்புச்சீட்டாக மாறியது.

இரண்டு ஆண்டுகள் தொடா் சரிவுக்குப் பிறகு பரஸ்பர நிதி துறை நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு தொடா்ச்சியாக ஏழாவது ஆண்டாக 2019-லும் ஏற்றம் பெற்றது. கடந்த 2009-இல் பரஸ்பர நிதியங்களின் சொத்து மதிப்பு ரூ.8.22 லட்சம் கோடியாக காணப்பட்ட நிலையில், 2019-இல் ரூ.27 லட்சம் கோடி என்ற உச்சத்தை தொட்டுள்ளது. ஆக, கடந்த பத்து ஆண்டுகளில் பரஸ்பர நிதியங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பானது 3 மடங்கு அளவிலான வளா்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது.

அளவின் அடிப்படையில் எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்டு நிறுவனம் ரூ.3,82,517 மதிப்பிலான சொத்துகளை நிா்வகித்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஐசிஐசிஐ புரூடென்ஷியல் (ரூ.3,61,506 கோடி), எஸ்பிஐ மியூச்சுல் ஃபண்டு (ரூ.3,52,632 கோடி) நிறுவனங்கள் உள்ளதாக பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT