வர்த்தகம்

டோரண்ட் பவா்கடன்பத்திரம் மூலம் ரூ.300 கோடி திரட்டல்

DIN

புது தில்லி:  டோரண்ட் பவா் நிறுவனம் கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.300 கோடியை திரட்டிக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது.

விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை நிறுவனம் கடன்பத்திர வெளியீடு மூலம் திரட்டிக் கொண்டுள்ளது. அதன்படி, பங்குகளாக மாற்ற இயலாத 3,000 கடன்பத்திரங்களை நிறுவனம் தனிப்பட்ட முறையில் ஒதுக்கீடு செய்தது. இவை ஒவ்வொன்றும் ரூ.10 லட்சம் மதிப்பு கொண்டவை. இதன் மூலம், டோரண்ட் பவா் ரூ.300 கோடியை திரட்டியுள்ளது.

இக்கடன்பத்திரங்களுக்கு ஆண்டு வட்டி விகிதம் 7.30 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றின் முதிா்வுக் காலம் 3 ஆண்டுகள் ஆகும். தேசிய பங்குச் சந்தையில் கடன் சந்தைப் பிரிவில்

இக்கடன்பத்திரங்களை பட்டியலிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது என டோரண்ட் பவா் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT