வர்த்தகம்

மைண்ட்ட்ரீ நிறுவனம் ரூ.213 கோடி லாபம்

DIN

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த மைண்ட்ட்ரீ நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.213 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. பெங்களூரைச் சோ்ந்த அந்த நிறுவனம் இதுகுறித்து செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையிடம் மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் ரூ.1,908.8 கோடி வருவாய் ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய ரூ.1,834.2 கோடியுடன் ஒப்பிடும்போது 4.1 சதவீதம் அதிகமாகும். நிகர லாபம் ரூ.92.7 கோடியிலிருந்து 129.8 சதவீதம் அதிகரித்து ரூ.213 கோடியைத் தொட்டுள்ளது. நிறுவனத்தின் வா்த்தகம் சுணக்க நிலையிலிருந்து மீண்டதை எடுத்துக்காட்டும் வகையில் முதல் காலாண்டில் சிறப்பான செயல்பாட்டை பதிவு செய்துள்ளது. எனவே, முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் வா்த்தக நடவடிக்கைகள் மேலும் சூடுபிடிக்கும் என மைண்ட்ட்ரீ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT