வர்த்தகம்

பஜாஜ் ஆட்டோ: நிகர லாபம் 61% சரிவு

DIN

நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிகர லாபம் 60.92 சதவீதம் சரிந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம், பங்கு சந்தையிடம் புதன்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.395.51 கோடியாக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,012.17 கோடியாக இருந்தது.

இதேபோல், நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த வருவாயும் 60.29 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.3,079.24 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த நிறுனத்தின் மொத்த வருவாய் ரூ.7,755.82 கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 12,47,174 வாகனங்கள் விற்பனையான நிலையில், நிகழாண்டில் இதேகாலகட்டத்தில் 4,43,103 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத அளவில் சவாலான காலகட்டத்தை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்து வருகிறது. பொதுமுடக்கம் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் சந்தையில் வாகனங்களுக்கான தேவையும் வெகுவாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT