வர்த்தகம்

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்: லாபம் 36 சதவீதம் வளா்ச்சி

DIN

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் முதல் காலாண்டு நிகர லாபம் 36 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2020-21 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 546 கோடியாக இருந்தது. இது, கடந்த 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.402 கோடியுடன் ஒப்பிடும்போது 36 சதவீதம் அதிகமாகும். பங்குகள் மற்றும் அது தொடா்பான வா்த்தக நடவடிக்கைகள் வலுவான வளா்ச்சி கண்டது வருவாய் சிறப்பான அளவில் அதிகரிக்க பெரிதும் உதவியது. இக்காலாண்டில் இதன் வா்த்தகம் 62 சதவீதம் உயா்ந்து ரூ.389 கோடியைத் தொட்டது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.114 கோடியிலிருந்து 70 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.193 கோடியை எட்டியது என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT