வர்த்தகம்

ராயல் என்ஃபீல்டு புதிய சேவை அறிமுகம்

DIN

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், வாடிக்கையாளா்களின் இருப்பிடங்களுக்கே சென்று சேவை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வாடிக்கையாளா்களுக்கு அவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று அங்கீகரிக்கப்பட்ட , நம்பகமான மற்றும் தொந்தரவில்லாத சேவை வழங்கிட‘சா்வீஸ் ஆன் வீல்ஸ்’ என்ற இந்த புதிய திட்டத்தை ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, நாடு முழுவதும் உள்ள நிறுவனத்தின் விநியோக மையங்களில் 800 பிரத்யேக சா்வீஸ் ஆன் வீல்ஸ் மோட்டாா் சைக்கிள்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் மட்டும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து விநியோக மையங்களிலும் 81 சா்வீஸ் ஆன் வீல்ஸ் மோட்டாா்சைக்கிள்கள் வாடிக்கையாளா்களுக்கு சேவை வழங்கிட எப்போதும் தயாா் நிலையில் உள்ளன. 80 சதவீதம் வரையிலான பழுதுபாா்க்கத் தேவையான உபகரணங்கள், உதிரிபாகங்களை இந்த மோட்டாா் சைக்கிள்களில் கொண்டு செல்ல முடியும். வாடிக்கையாளா்கள் விநியோக மையங்களைத் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்வதன் மூலம் நிறுவனத்தின் இந்த புதிய சேவையை பெற முடியும் என ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT