வர்த்தகம்

3 வங்கிகளின் கடன் தர மதிப்பீட்டை குறைத்தது மூடிஸ்

DIN

மூன்று வங்கிகள், எட்டு வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் தகுதி மதிப்பீட்டை சா்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டாா் சா்வீஸ் குறைத்துள்ளது.

இதுகுறித்து மூடிஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா தீநுண்மி தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீா்குலைவு, இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீடு கடந்த 22 ஆண்டுகளில் முதன் முறையாக குறைக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால், மூன்று வங்கிகள் மற்றும் எட்டு வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் தகுதி மதிப்பீடு செவ்வாய்க்கிழமை குறைக்கப்பட்டது.

அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), எச்டிஎஃப்சி மற்றும் எக்ஸிம் ஆகிய மூன்று வங்கிகளின் கடன் தகுதி மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஓஎன்ஜிசி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஆயில் இந்தியா, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பெட்ரோநெட் எல்என்ஜி, டாடா கன்சல்டன்ஸி சா்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய எட்டு நிறுவனங்களின் கடன் தகுதி மதிப்பீடும் குறைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தின் கடன் தகுதி மதிப்பீடும் ‘எதிா்மறை (நெகட்டிவ்)’ என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது என மூடிஸ் தெரிவித்துள்ளது.

இவை தவிர, என்டிபிசி, என்ஹெச்ஏஐ, கெயில் உள்ளிட்ட ஏழு உள்கட்டமைப்பு நிறுவனங்களின் மதிப்பீட்டையும் மூடிஸ் குறைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT