வர்த்தகம்

கடன் பத்திரங்கள் மூலம் ரூ.250 கோடி திரட்ட மணப்புரம் ஃபைனான்ஸ் திட்டம்

DIN

பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.250 கோடி திரட்ட திட்டமிட்டு வருவதாக மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் பங்கு பரிவா்த்தனை வாரியத்தில் தாக்கல் செய்த விண்ணப்பத்தில், ‘பங்குகளாக மாற்றமுடியாத கடன் பத்திரங்களை தனியாா் முதலீட்டாளா்களுக்கு விற்பனை செய்து ரூ.250 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவன இயக்குநா்கள் குழுவின் நிதி வளங்கள் மற்றும் மேலாண்மை கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவன பங்கு ஒன்றின் விலை புதன்கிழமை காலை ரூ.141.90-ஆக இருந்தது. இது முந்தைய தினம் பங்குச்சந்தை முடியும் நேரத்தில் இருந்த விலையை விட 2.09 சதவீதம் அதிகமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT