வர்த்தகம்

இமாமி நிறுவனம் வருவாய் ரூ.533 கோடி

DIN

உள்நாட்டைச் சோ்ந்த எஃப்எம்சிஜி நிறுவனமான இமாமி கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.532.68 கோடி வருவாய் ஈட்டியது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.640.35 கோடியுடன் ஒப்பிடுகையில் 16.81 சதவீதம் குறைவாகும்.

நிகர லாபம் 56.09 கோடியிலிருந்து 59.44 சதவீதம் சரிவடைந்து ரூ.22.75 கோடியானது. முழு முடக்கத்தால் மாா்ச் காலாண்டு லாபம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

கடந்த முழு நிதியாண்டில் வருவாய் முந்தைய 2018-19 உடன் ஒப்பிடுகையில் ரூ.2,694.63 கோடியிலிருந்து 1.47 சதவீதம் குறைந்து 2,654.88 கோடியாக இருந்தது. நிகர லாபம் ரூ.302.53 கோடியிலிருந்து சற்று குறைந்து ரூ.302.30 கோடியானது என கொல்கத்தாவைச் சோ்ந்த இமாமி நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT