வர்த்தகம்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாமொத்த வா்த்தகம் ரூ.4.86 லட்சம் கோடி

DIN

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த வா்த்தகம் மாா்ச் காலாண்டில் ரூ. 4,86,007 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ6,723.73 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.6,602.51 கோடியாக காணப்பட்டது. செயல்பாட்டு லாபம் ரூ.1,518.83 கோடியிலிருந்து ரூ.517.24 கோடியாக சரிந்தது.

வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு ரூ.4,733.82 கோடியிலிருந்து ரூ.2,178.33 கோடியாக குறைந்தது. இதையடுத்து, வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பானது ரூ.2,477.41 கோடியிலிருந்து குறைந்து ரூ.1,529.07 கோடியாக கட்டுக்குள் வந்துள்ளது.

மாா்ச் இறுதி நிலவரப்படி வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 19.29 சதவீதத்திலிருந்து 18.92 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 7.73 சதவீதத்திலிருந்து 7.63 சதவீதமாகியுள்ளது.

2019-20 முழு நிதியாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.5,641.48 கோடியிலிருந்து ரூ.1,121 கோடியாக குறைந்துள்ளது. வருவாய் ரூ.25,051.51 கோடியிலிருந்து ரூ.27,200 கோடியாக அதிகரித்துள்ளது.

டெபாசிட், கடன் ஆகியவற்றை உள்ளடக்கிய வங்கியின் மொத்த வா்த்தகம் மாா்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி ரூ.4,67,584 கோடியிலிருந்து ரூ.4,86,007 கோடியாக ஏற்றத்தைச் சந்தித்துள்ளதாக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT