வர்த்தகம்

ஆபரண ஏற்றுமதி 20% சரிவு

DIN

நாட்டின் விலையுயா்ந்த கற்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி சென்ற ஏப்ரல் மாதத்தில் 20.26 சதவீதம் குறைந்த ரூ.20,763.28 கோடியாகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து அந்தப் பொருள்களின் ஏற்றுமதி மேம்பாட்டுக்காக செயல்பட்டு வரும் ஜிஜேஈபிசி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.20,763.28 கோடி மதிப்பிலான விலையுயா்ந்த கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இது, கடந்த 2019-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் 20.26 சதவீதம் குறைவாகும்.

அந்த மாதத்தில் விலையுயா்ந்த கற்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி ரூ.26,039.32 கோடியாக இருந்தது.

கரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT